search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் சிலை கொள்ளை"

    தங்கமூலாம் பூசிய வெண்கல அம்மன் சிலையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விசலூர் கிராமத்தில் மகா காளியம்மன்கோவில் உள்ளது. திருவாரூர் -மயிலாடுதுறை மெயின் ரோட்டில் அமைந்துள்ள இக்கோவிலை கிராம மக்கள் வழிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கோவில் அருகே உள்ள குளத்துக்கு பொதுமக்கள் குளிக்க சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோவில் பூசாரி தட்சிணாமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர்.

    அப்போது கோவிலில் இருந்த தங்கமூலாம் பூசிய வெண்கலத்தால் ஆன உற்சவர் அம்மன் சிலை கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் 1½ அடி உயரமும் 45 கிலோ எடையும் கொண்ட இந்த அம்மன் சிலையில் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும் .

    இதுபற்றி நன்னிலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்- இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர், விரைந்து சென்று கோவிலில் விசாரணை நடத்தினர்.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கோவில் பூட்டை உடைத்து உலோக சிலையை திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை திருடிய கும்பலை தேடிவருகிறார்கள்.

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் கடந்த சில ஆண்டுகளாக சிலை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    குறிப்பாக பழங்கால கோவில்களை நோட்ட மிட்டு தொன்மையான சிலைகள் திருடப்பட்டு வருகிறது. இதனால் சிலை கொள்ளையர்களை தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×